சினிமா செய்திகள்

’நடித்ததிலேயே கவர்ச்சியான கதாபாத்திரம்’... ’காக்டெய்ல் 2’ அப்டேட் கொடுத்த கிரித்தி சனோன்

இப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

மும்பை,

பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் தனது அடுத்த படம் காக்டெய்ல் 2-க்கு தயாராகி வருகிறார். இதில் ஷாஹித் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தானா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கிரித்தி சனோன், இந்த படத்தில் தனது கதாபாத்திரம் மிகவும் சிறப்பானது என்றும் அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “நான் இதுவரை நடித்த கதாபாத்திரத்தை விட இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறேன். இது நான் இதுவரை செய்ததில் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரம். இயக்குனர் ஹோமி என்னுள் இருந்த புதிய பக்கத்தை வெளிக்கொண்டுவந்துள்ளார். அது எனக்கே தெரியாத ஒன்று” என்றார்.

இப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வர உள்ளது. ரசிகர்களிடையே இப்படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.