“அப்படி செய்தால் புகழ் கிடைக்கும்… மரியாதை கிடைக்காது” - ராஷி கன்னா

அவரது இந்த கருத்துகள் தற்போது திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“அப்படி செய்தால் புகழ் கிடைக்கும்… மரியாதை கிடைக்காது” - ராஷி கன்னா
Published on

ஐதராபாத்,

திரைப்படத் துறையில் பிஆர் (PR) கலாசாரம் குறித்து நடிகை ராஷி கன்னா பரபரப்பான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “இப்போது சினிமாத்துறையில் பிஆர் குழுக்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. சமூக வலைதளங்களில் ஹைப் உருவாக்கி, சிறிய நடிகர்களையும் பெரிய ஸ்டார்களாக மாற்றும் சக்தி அதற்கு உள்ளது” என்று தெரிவித்தார்.

Also Read
'துரந்தர் 2' பிரசாரப் படம்... சகோதரி கடும் விமர்சனம் - அனீத் படாவின் திரைப்பயணத்திற்கு ஆபத்தா?
“அப்படி செய்தால் புகழ் கிடைக்கும்… மரியாதை கிடைக்காது” - ராஷி கன்னா

மேலும், “பிஆர் மூலம் கிடைக்கும் புகழ் தற்காலிகமானது. உண்மையான புகழ் என்பது நம்முடைய வேலை, உழைப்பு, திறமை மூலமே கிடைக்கும். அது பிஆர் உருவாக்கும் ஹைப்பால் கிடைக்காது” என்றும் கூறினார்.

இதனால் தான் தன்னிடம் தனியாக பிஆர் குழு எதுவும் இல்லை எனவும், தனது திறமை மற்றும் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து செயல்பட்டு வருவதாகவும் ராஷி கன்னா தெரிவித்தார். அவரது இந்த கருத்துகள் தற்போது திரைப்படத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com