சினிமா செய்திகள்

மகள்களுடன் சென்று அத்திவரதரை வழிபட்ட லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டார்.

சென்னை

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை கண்காணிக்க இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையாவுடன் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அறநிலையத் துறை நிர்வாகம் விரைவு தரிசனத்திற்காக அறிமுகப்படுத்திய 300 ரூபாய் 'ஆன்லைன்' டிக்கெட்டில் மாற்றத்தை செய்துள்ளது. மாலை 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை அத்திவரதரை விரைவாக தரிசிக்க முதலில் 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன் 1000 பேராக உயர்த்தப்பட்டு தற்போது ஒரு நாளைக்கு 2000 பேர் விரைவு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறநிலையத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தனது மகள்களுடன் சென்ற நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தனது மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன், லதா ரஜினிகாந்த் அத்திவரதரை மனமுருக வழிபட்டார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அத்திவரதரை தரிசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்