சினிமா செய்திகள்

அந்த தமிழ் படத்தில் இருந்து விலகிய நடிகை லாவண்யா… பின்னால் இருந்த அதிர்ச்சி சம்பவம்

சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை லாவண்யா பகிர்ந்து கொண்டார்.

சென்னை,

நடிகர் வருண் தேஜின் மனைவியும் நடிகையுமான லாவண்யா திரிபாதி சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவரது கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய லாவண்யா திரிபாதி, திரைப்படத் துறையில் தானும் காஸ்டிங் கவுச் பிரச்சினையை எதிர்கொண்டதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் அந்த பட இயக்குனரின் அணுகுமுறை தன்னை சிரமப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், “கொரோனா காலத்தில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த படத்தின் இயக்குனரின் நடத்தை எனக்கு சரியாக தோன்றவில்லை. அதனால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். அதன் பிறகு என்னைப் பற்றி செய்தித்தாள்களில் பொய்யான தகவல்கள் வெளியாகின. அப்போது எனக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் நான் அழுத நாட்களும் இருக்கின்றன,” என்றார்.

லாவண்யா திரிபாதி தமிழில் ’பிரம்மன்’, ’மாயவன்’, ’தணல்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ’சதிலீலாவதி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.