சினிமா செய்திகள்

மாதவன் ஜோடியாக மஞ்சு வாரியர்

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் மஞ்சு வாரியர்.

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவருக்கும் நடிகர் திலீப்புக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கடத்தல் சம்பவத்துக்கு எதிராகவும் மஞ்சு வாரியர் பேசி வந்தார். விவாகரத்துக்கு பிறகு மஞ்சுவாரியர் மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் நடித்து வசூல் குவித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படம் தமிழில் ஜோதிகா நடிக்க 36 வயதினிலே என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது மஞ்சு வாரியருக்கு இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அமெரிக்கை பண்டிட் என்ற பெயரில் தயாராகும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கல்பேஷ் டைரக்டு செய்கிறார். இது மஞ்சு வாரியரின் முதல் இந்தி படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மாதவன் ஏற்கனவே பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்