சினிமா செய்திகள்

மலையாள நடிகர் சோபி ஜார்ஜ் அதிரடி கைது - மோசடி வழக்குகள் அம்பலம்

வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று பாட வைப்பதாக பலரிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மலையாள சினிமா நடிகரான சோபி ஜார்ஜ், தனியாக இசைக்குழு நிர்வகித்து பல்வேறு நகரங்களில் கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்தநிலையில் காசோலை மோசடி வழக்கில் சோபி ஜார்ஜ் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். காசோலை மோசடி வழக்கில் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் கொச்சி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் 2013-ம் ஆண்டு முதல் கேரளாவின் பல பகுதிகளில் பல்வேறு ஏமாற்று மற்றும் மோசடி வழக்குகளும் இவர் மீது இருப்பது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று பாட வைப்பதாக பலரிடமும் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே இவரது இசைக்குழு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சோபி ஜார்ஜ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.