சினிமா செய்திகள்

“திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது நல்லது” - வைரலாகும் பிரபல நடிகையின் கருத்து

“லிவிங் டுகெதர்” பற்றி அவர் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோயின் மற்றும் முன்னாள் மிஸ் இந்திய அழகி மானசா வாரணாசி. இவரது நடிப்பில் காதலர் தினத்தன்று வெளிவந்த படம் “கப்புள் பிரண்ட்லி”. இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இது அவரது இரண்டாவது படமாகும்.

இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் “லிவிங் டுகெதர்” பற்றி அவர் கூறிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில்,

“எந்த உறவிலும் புரிதல் மிகவும் முக்கியம். ஒருவரை ஒருவர் முழுமையாக அறிந்து கொள்ள “லிவிங் டுகெதர்” மிகவும் உதவியாக இருக்கும். முன்பெல்லாம் மக்கள் திருமணத்திற்கு பிறகே ஒருவரை ஒருவர் அறிந்துகொள்வார்கள். அதனால் பல சமரசங்கள் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய சூழலில், “லிவிங் டுகெதர்” ஒருவரின் இயல்பையும் எண்ணங்களையும் முன்கூட்டியே புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது’ என்றார்.

மானசாவின் இந்த கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது எண்ணத்தை ஆதரித்தாலும், மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.