சினிமா செய்திகள்

'மார்க் ஆண்டனி' சூப்பர் டூப்பர் ஹேப்பி - வெங்கட் பிரபு வாழ்த்து..!

'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை,

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய டுவிட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், "மார்க் ஆண்டனி படம் குறித்து நல்ல செய்திகள் வருகிறது. சகோதரர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சாரை நினைத்து சூப்பர்.. டூப்பர்.. ஹேப்பியாக இருக்கிறது. என்னுடைய ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்