சினிமா செய்திகள்

‘சவர கத்தி’க்காக மிஷ்கின் துரத்துகிறார்; ராம் ஓடுகிறார்

மிஷ்கின் விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘சவர கத்தி’ படத்தில், வில்லனாக நடித்து இருக்கிறார்.

நாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் கதை நாயகனாக நடித்த டைரக்டர் மிஷ்கின், விரைவில் திரைக்கு வர இருக்கும் சவர கத்தி படத்தில், வில்லனாக நடித்து இருக்கிறார். திரைக்கதையையும் இவரே எழுதி படத்தை தயாரித்தும் இருக்கிறார். ஜி.ஆர்.ஆதித்யா டைரக்டு செய்திருக்கிறார். சவர கத்தி பற்றி மிஷ்கின் சொல்கிறார்:-

பொய் பேசிக்கொண்டு திரியும் ஒருவனும், கோபத்தோடு அலையும் ஒருவனும் சந்தித்து கொள்ளும்போது, என்ன விளைவுகள் ஏற்படும்? என்பதே இந்த படத்தின் கதை. இதில், ராம் சவர தொழிலாளியாக வருகிறார். அவருடைய மனைவியாக பூர்ணா நடித்துள்ளார். இவருக்கு காது கேளாத பெண் கதாபாத்திரம். காது கேட்காத ஒரு பெண், வாழ்க்கை பாடத்தை எப்படி கற்றுக் கொடுக்கிறாள்? என்பதே படத்தின் கரு.

என் கதாபாத்திரம் மோசமான ரவுடியாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. படம் முழுக்க நான் துரத்துவதும், ராம் ஓடுவதுமாகவே காட்சிகள் இருக்கும். பொய்யும், கோபமும் ஒரே மாதிரியானவைதான். இரண்டுமே கைவிடப்பட வேண்டியவை. அதை இருவரும் கைவிட்டார்களா? என்பதே விறுவிறுப்பான திரைக்கதை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்