சினிமா செய்திகள்

2020ல் அதிகம் டுவிட் செய்யப்பட்டுள்ள திரைப்படம்: முதல் இடத்தில் “மாஸ்டர்”, 3வது இடத்தில் “வலிமை”

2020ம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் டுவீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்னை,

ஆண்டுதோறும் சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட படம் குறித்து சர்வே எடுப்பது வழக்கம் . அந்தவகையில் இந்த வருடம் டுவிட்டரில் அதிகம் பதிவுகள் இடம்பெற்றுள்ள தென்னிந்திய திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதன்படி 2020ம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் டுவீட் செய்யப்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் பவன் கல்யாணின் வக்கீல் சாப் படம் பெற்றுள்ளது. அடுத்ததாக நடிகர் அஜித்தின் வலிமை படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் சூர்யாவின் சூரரை போற்று 5வது இடத்தையும், ரஜினியின் தர்பார் 10 ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.

அதேபோல் நடிகர்கள் பற்றி அதிகம் டுவீட் செய்யப்பட்டுள்ள பட்டியலில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு முதலிடமும், பவன் கல்யாண் இரண்டாவது இடமும், நடிகர் விஜய் மூன்றாவது இடத்தையும், ஜூனியர் என்டிஆர் 4வது இடத்தையும், சூர்யா 5வது இடத்தையும், அல்லு அர்ஜுன் 6ம் இடத்தையும், ராம் சரண் 7ம் இடத்தையும், தனுஷ் 8வது இடத்தையும், மோகன்லால் 9வது இடத்தையும், சிரஞ்சீவி 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்