சென்னை,
ரன்வீர் கபூருக்கு ஜோடியாக 'ராக்ஸ்டார்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி பிரபலமானவர் நர்கிஸ் பக்ரி. சமீபத்தில் வெளியான 'ஹவுஸ்புல் 5' படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் இப்போது தெலுங்கு திரையுலகில் நுழைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111-வது திரைப்படத்தை (NBK111) இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஒரு பிரமாண்டமான 'ஸ்பெஷல் சாங்' இடம்பெற உள்ளது. இதில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து ஆட நர்கிஸ் பக்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
ஐதராபாத்தில் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் இந்த வார இறுதியில் இந்தப் பாடலின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தில் நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, ஆனால் அது கைக்கூடவில்லை.