சினிமா செய்திகள்

’தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இயக்குனரின் பார்வையில் எடுக்கப்பட்டுள்ளது- பிரபல பாலிவுட் நடிகர் பேச்சு

விவேக் அக்னிகொத்ரி அவரது பார்வையில் ’தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை எடுத்துள்ளதாக பிரபல பாலிவுட் நடிகர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர்.

அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதற்கிடையில், காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு பல்வேறு மாநில அரசுகளும் வரிச்சலுகை வழங்கியுள்ளன. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து பாலிவுட் உலகின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவரான நவாஸுதீன் சித்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " ஒவ்வொரு இயக்குனருக்கும் திரைப்படம் எடுப்பதற்கு தனிப்பட்ட பார்வையிருக்கும். விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி அவரது பார்வையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை எடுத்துள்ளார். அது சிறந்தது. ஆனால் மற்றவர்கள் எதிர்காலத்தில் அவர்களின் கண்ணோட்டத்தில் அந்த திரைப்படத்தை எடுக்கலாம்.

தங்கள் திரைப்படங்களில் எந்தவொரு இயக்குனருக்கும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தங்கள் சொந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்த உரிமை உள்ளது " என தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்