சினிமா செய்திகள்

கவுரி கிஷன் நடித்த "அதர்ஸ்" படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் கவுரி கிஷன் நடித்த ‘அதர்ஸ்’ படம் நவம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'அதர்ஸ்'. மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதபாத்திரங்களில் 'முண்டாசுபட்டி' ராமதாஸ், 'நண்டு' ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் மாதம் 7ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தவனே என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஜிப்ரான், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் நமீதா பாபு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை மோகன்ராஜன் எழுதியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்