சினிமா செய்திகள்

4 தேசிய விருதுகளை வென்ற பிரபல கலை இயக்குனர் தூக்கு போட்டு தற்கொலை

பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் நிதின் தேசாய்

தினத்தந்தி

மும்பை,

'தேவதாஸ்', 'ஜோதா அக்பர்' மற்றும் 'லகான்' உள்பட ஏராளமான வெற்றி படங்களுக்கு அரங்குகளை வடிவமைத்து புகழ்பெற்ற கலை இயக்குராக வலம் வந்தார் நிதின் தேசாய் (வயது 57).

நிதின் தேசாய் சிறந்த கலை இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதை நான்கு முறை பெற்றிருக்கிறார். நிதின் தேசாய் மும்பை கர்ஜத் பகுதியில் உள்ள தனது ஸ்டுடியோவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆகஸ்டு 9-ந் தேதி அவர் தனது 58-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், திடீரென இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.  அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நிதின் தேசாயின் மறைவுக்கு நிதி நெருக்கடி தான் காரணம் என கர்ஜத் பகுதி எம்எல்ஏ மகேஷ் பல்டி கூறியுள்ளார். அவர் பல நாட்களாக நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வந்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.

ஹம் தில் தே சுகே சனம், தேவதாஸ், ஜோதா அக்பர், லகான், ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை மற்றும் பாஜிராவ் மஸ்தானி போன்றவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சில.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்