சினிமா செய்திகள்

நிதின் சத்யாவின் பழிவாங்கல் கதை

`சென்னை 28' இரண்டாம் பாகம் படத்துக்கு பிறகு நிதின் சத்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் `கொடுவா'.

`சத்தம் போடாதே', `சென்னை 28' படங்கள் மூலம் பிரபலமான நிதின் சத்யா `சென்னை 28' இரண்டாம் பாகம் படத்துக்கு பிறகு கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் `கொடுவா'. இதில் நாயகியாக சம்யுக்தா மற்றும் சண்முகநாதன், ஆடுகளம் முருகதாஸ், சுப்பு பஞ்சு, ஸ்வயம் சித்தா, வினோத் சாகர், நயன சாய், சுபத்ரா, ஆடுகளம் நரேன், சந்தான பாரதி, சுதேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிளேஸ் கண்ணன் தயாரித்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் சாத்தையா டைரக்டு செய்துள்ளார். ராமநாதபுரம் இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில் படம் தயாராகிறது. இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞனின் காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சினைகள், பழிவாங்கல் போன்றவற்றை உள்ளடக்கிய அழுத்தமான ஜனரஞ்சக படமாக உருவாவதாக இயக்குனர் தெரிவித்தார். இசை: தரண்குமார், ஒளிப்பதிவு: கார்த்திக் நல்லமுத்து.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்