சினிமா செய்திகள்

திருமணத்தில் சந்தோஷம் இல்லை - நடிகை சதா

தமிழில் ஜெயம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சதா எதிரி, வர்ண ஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேஷம் உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். திருமணம் குறித்து சதா அளித்துள்ள பேட்டியில், ‘

தினத்தந்தி

'நிறைய பேர் திருமணம் செய்துகொள்ளுங்கள், குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று எனக்கு அறிவுரை சொல்கிறார்கள். என் வாழ்க்கையை முடிவு செய்யும் அதிகாரத்தை அவர்களுக்கு யார் கொடுத்தது?

இப்போதெல்லாம் 10 திருமணங்கள் நடைபெற்றால் அதில் ஐந்து ஜோடிகள் கூட திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருக்கவில்லை. யாரோ என்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏன் நான் நினைக்க வேண்டும்? நமக்காக மற்றவர்கள் எதற்காக உழைக்க வேண்டும்? என் வாழ்க்கையை நான் ஆனந்தமாக கழிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நான் பார்ட்டி, பப் என செல்வது இல்லை. திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு சந்தோஷமாக இருக்க முடியாது. திருமணம் என்ற பெயரில் மற்றவரை சார்ந்து வாழ்ந்தால் நமது நெருக்கடியையும் அவரே தாங்க வேண்டும். ஒரு வேளை நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் மணமகன் எனது சம்பாத்தியத்தை சார்ந்து இருக்கக்கூடாது" என்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது