சினிமா செய்திகள்

“படங்களில் கருத்து சொல்ல தேவை இல்லை” -நடிகை ரகுல்பிரீத் சிங்

சினிமாவில் கருத்து சொல்ல தேவை இல்லை என்று நடிகை ரகுல்பிரீத் சிங் கூறினார்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பிரபலமான ரகுல்பிரீத் சிங், இப்போது சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

சினிமாவில் கருத்து சொல்ல தேவை இல்லை. நிஜ வாழ்க்கையில் யாரும் யாருக்கும் கருத்து சொல்லவோ, அறிவுரை வழங்கவோ முடியாது. அப்படியே சொன்னாலும் அது பிடிக்காது. எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் தெரியும். எனவே சினிமா மூலம் இப்போது எந்த கருத்தையும் சொல்ல தேவை இல்லை.

இப்போதைய தலைமுறையினருக்கு சரியான வழி தெரியும், வாழ்க்கையை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பக்குவமும், அறிவும் அவர்களுக்கு இருக்கிறது. அவரவர் வாழ்க்கையை சரியான வழியில் கொண்டு செல்லவும் அவர்களுக்கு தெரியும். வேகமாக யோசிக்கிறார்கள். ஏதாவது சொன்னாலும் கூட ஏளனமாக பார்ப்பார்கள்.

இதனால் எனது சினேகிதிகளுக்கு கூட நான் அறிவுரை சொல்வது இல்லை. அவரவர் வாழ்க்கை அவரவர்களுடையது. அவர்கள் எடுக்கிற முடிவு நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அவர்களே பொறுப்பு. என் சினேகிதிகளுடன் எந்த பிரச்சினையும் வராமல் இருப்பதற்கு அறிவுரை சொல்லாமல் இருப்பதும் காரணம். சினிமாவானாலும், நிஜ வாழ்க்கையாக இருந்தாலும் எனது சம்பந்தப்பட்ட முடிவுகளை நானே எடுக்கிறேன்.

இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்