சினிமா செய்திகள்

‘ஓ ரோமியோ’ படத்தின் புதிய பாடல்...கவனம் ஈர்க்கும் திஷா பதானியின் நடனம்

திஷா பதானி நடனமாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

பிரபல இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், நடிகர் ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓ ரோமியோ' திரைப்படத்திலிருந்து 'ஆஷிகோன் கி காலனி’ பாடல் வெளியாகி இருக்கிறது. திஷா பதானி நடனமாடியுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த ஆக்‌சன்-திரில்லர் திரைப்படத்தை முன்னணி தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரித்துள்ளார். கதாநாயகியாக திரிப்தி திம்ரி நடித்துள்ளார்.

மேலும், நானா படேகர், பரிதா ஜலால் , அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸ்ஸி, திஷா பதானி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷால் பரத்வாஜ் - ஷாஹித் கபூர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம், பிப்ரவரி 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்