சென்னை,
வாழ்க்கையில் ஒண்ணு தேவைன்னா கூச்சப்படாம கேக்கணும் என்று நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களை நினைவுகூர்ந்தார். “ஸ்கூல், காலேஜ்ல போட்டிகள் நடக்கும். டிராமா போடுவாங்க. ஆனால் இதில் எதிலுமே கலந்துகொள்ளாமல் ஒருவன் வேடிக்கை மட்டும் பார்ப்பான். அந்த ஒருத்தன் நான் தான்,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அதற்காக ஒருபோதும் வருத்தப்பட வேண்டியதில்லை என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார். “வாழ்க்கையில் ஒரு பாயிண்ட் வரும். அந்த ஒரு தருணம் வந்தால், அதற்கு பிறகு உலகமே நம்மை வேடிக்கை பார்க்கும்,” என்றார்.
மேலும், ``என்னோட வாழ்க்கைல நான் கத்துக்கிட்டது ஒண்ணு தான். நமக்கு ஒண்ணு தேவைன்னா கூச்சப்படாம கேக்கணும்.. கூச்சப்படாம கேட்டு, `நோ’ அப்படினு பதில் வந்தா, எதுவும் ஆக போறது இல்ல. ஆனா நாம கேட்டு, நடக்குறதுக்கு ஒரு சான்ஸ் இருக்குல.. அதான் முக்கியம்" என்றார். பிரதீப் ரங்கநாதனின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.