சினிமா செய்திகள்

பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கியிருந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து பார்த்திபன், 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அகிரா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நேர்க்கோட்டில் அமையாத (Non-Linear) கதையம்சம் கொண்ட திரைப்படம் என்ற பெருமையைக் கொண்டுள்ளது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் 'மாயவா தூயவா' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இரவின் நிழல்' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இரவின் நிழல் திரைப்படம் வருகிற ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்