சினிமா செய்திகள்

சாலை விபத்து பற்றிய படம் : பாக்யராஜ்-ரேகாவுடன், `குஸ்கா'

சாலை விபத்தில் சிக்கிக் கொள்கிற ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றிய உணர்வுப்பூர்வமான கதை, `குஸ்கா' என்ற பெயரில் படமாகிறது.

பாக்யராஜ்-ரேகா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் இதில் நடிக்கிறார்கள். கதாநாயகனாக கிஷோர் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக சஸ்வதா நடிக்கிறார். டி.பி.கஜேந்திரன், அனுமோகன், அண்ணாதுரை கண்ணதாசன், டைரக்டர் கிருஷ்ணா, மயில்சாமி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ஜெரால்ட் நடித்து இருக்கிறார்.

நாடகம், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் ஆகிய மூன்று துறைகளிலும் அனுபவப்பட்ட பி.என்.சி.கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். எஸ்.நாராயணன், எஸ்.சரவணகுமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். ``சாலை விபத்தின் தாக்கத்தை இதுவரை சொல்லப்படாத முற்றிலும் புதிய கோணத்தில், இந்த படத்தில் அணுகியிருக்கிறோம்'' என்கிறார், டைரக்டர் கிருஷ்ணா.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்