சினிமா செய்திகள்

`பீட்சா' படம் 3-ம் பாகம்

விஜய்சேதுபதி நடித்த `பீட்சா' படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகமும் வெளியானது. தற்போது பீட்சா 3-ம் பாகம் `பீட்சா 3 மம்மி' என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் அஸ்வின் காக்குமனு, பவித்ரா மாரிமுத்து, கவுரவ் நாராயணன், காளி வெங்கட், குரேஷி, அனுபமா, அபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மோகன் கோவிந்த் டைரக்டு செய்துள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, ``இருக்கையை விட்டு துள்ளி எழ வைக்கும் திகில் காட்சிகளும், யூகிக்க முடியாத திடீர் திருப்பங்களும் நிறைந்த திகில் படமாக தயாராகி உள்ளது. பார்வையாளர்களை இருக்கைகளின் நுனிக்கே கொண்டு வரும். மறக்க முடியாத திரை அனுபவமாகவும் இருக்கும். முதல் இரண்டு பாகங்களை விட வித்தியாசமாக உருவாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் செய்யப்படாத சில புதிய முயற்சிகள் இந்த படத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன'' என்றார். 80 சதவீத காட்சிகள் இரவில் படமாக்கப்பட்டு உள்ளன. சி.வி.குமார் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு: பிரபு ராகவ், இசை: அருண் ராஜ்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு