சினிமா செய்திகள்

ஆஸ்கார் வென்ற கீரவாணி இசையில் 'ஜென்டில்மேன்-2' படத்திற்கு பாடல் எழுதும் கவிஞர் வைரமுத்து

‘ஜென்டில்மேன்-2’ படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க உள்ளார்.

சென்னை,

கடந்த 1993-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவித்திருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் 'ஜென்டில்மேன்-2' படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் 'ஜென்டில்மேன்-2' படத்திற்கு பாடல்கள் எழுதுவதாக கவிஞர் வைரமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் 'ஜென்டில்மேன்-2' படம் உருவாக உள்ளது. ஆஸ்கார் விருது வென்ற பின்னர் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்