சினிமா செய்திகள்

நடிகை விஷ்ணுப்ரியா மீது வழக்குப்பதிவு - சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை

சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

விஜயவாடா,

தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான விஷ்ணுப்ரியா பீமினேனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயவாடா சைபர் கிரைம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகாரில் விஷ்ணுப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். ஆரம்ப ஆதாரங்களை ஆய்வு செய்து, அடுத்தடுத்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் தொகுப்பாளராக பிரபலமான விஷ்ணுப்ரியா, பின்னர் திரைப்படங்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டு ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.

SCROLL FOR NEXT