சினிமா செய்திகள்

ஆபாச பட விவகாரம்: நடிகை ஷில்பா ஷெட்டி கைது ஆவாரா?

நற்சான்று வழங்க முடியாது என போலீஸ் தகவல் தெரிவித்த நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

மும்பை,

கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்காக கணவர் ராஜ்குந்த்ராவின் ஆபாச பட லீலைகள் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்து தான் நடந்ததா?, அவருக்கும் வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறியும் முயற்சியாக போலீசார் சமீபத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர். அதேநேரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தற்போதைய தருணத்தில் குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர். அதாவது ராஜ் குந்த்ராவின் பண பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு செய்ய மும்பை குற்றப்பிரிவு போலீசார் நிதி தணிக்கையாளர்களை நியமித்துள்ளனர்.

இந்த குழுவின் தணிக்கை வளையத்தில் ராஜ் குந்த்ராவின் வயான் இண்டஸ்ட்ரீஸ், ஆபாச படம் வெளியிட்டு மோசடி செய்த நிறுவனத்தின் கணக்கு மற்றும் ஷில்பா ஷெட்டி இயக்குனராக செயல்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான வங்கி கணக்கு ஆகியவையும் அடங்கும்.

ஆபாச பட தொழில் மூலம் ராஜ்குந்த்ராவிற்கு வெளிநாட்டில் இருந்து பணம் கிடைத்து உள்ளது. அது ஷில்பா ஷெட்டியின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் கிடைக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். இதனால் போலீசாரின் கழுகு பார்வை ஷில்பா ஷெட்டி மீதும் விழுந்து உள்ளது. இதன் காரணமாக ஷில்பா ஷெட்டி மீது வலுவான ஆதாரங்கள் சிக்கினால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு