மோகன்லால் நடித்த லூசிபர் மலையாள படம் மூலம் பிருதிவிராஜ் இயக்குனராகவும் அறிமுகமானார். தற்போது மேலும் 2 படங்களை இயக்கி வருகிறார். ஏழுக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தும் வருகிறார்.
பிருதிவிராஜ் புரொடக்ஷன் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி மலையாளத்தில் சில படங்களை பிருதிவிராஜ் தயாரித்தும் இருக்கிறார். அவரது தயாரிப்பில் 2019-ல் வெளியான மலையாள படம் டிரைவிங் லைசென்ஸ் பெரிய வெற்றி பெற்றது. லால் ஜூனியர் இயக்கிய இந்த படத்தில் பிருதிவிராஜ், சுரஜ், மியா ஜார்ஜ், தீப்தி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
டிரைவிங் லைசென்ஸ் படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் ஆக உள்ளது. இந்தி ரீமேக்கில் பிருதிவிராஜ் கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்க உள்ளார். இந்த படத்தை பிருதிவிராஜ் தயாரிக்க உள்ளார். இதன் மூலம் இந்தி பட உலகிலும் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.