சினிமா செய்திகள்

ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா வருகை செல்பி எடுக்க ரசிகர்கள் ஆர்வம்

ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா வருகை தந்ததால் ரசிகர்கள் உற்சாகம். #Namitha

ஈரோடு

ஈரோட்டில் தனியார் உணவக திறப்பு நிகழ்ச்சியில் நடிகை நமிதா கலந்து கொண்டார்.இதை அறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் ஆர்வத்துடன் நடிகை நமிதாவுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி அவர் பறக்கும் முத்தம் கொடுத்தார். ரசிகர்கள் அதனை ஒன்ஸ்மோர் கேட்டு வாங்கினர்

அங்கு அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது அரசியல் சூழல் சரியில்லாததால் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என நடிகை நமிதா கூறி உள்ளார்.