சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் அவதூறு ரசிகர்களை சாடிய பிரியா வாரியர்

வலைத்தளத்தில் அவதூறு ரசிகர்களை சாடிய பிரியா வாரியர்.

மலையாளத்தில் தயாரான ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடிக்கும் காட்சி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சில நண்பர்களுடன் ரஷியாவுக்கு சுற்றுலா சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதில் பிரியா வாரியர் புகைப்படங்களை மட்டும் சிலர் தனியாக எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்து அவரை மோசமாகவும், அவதூறாகவும் விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இது பிரியா வாரியருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பிரியாவாரியர் கூறும்போது, என் நண்பர்களுடன் பயணித்த வீடியோ காட்சிகளுக்கு முட்டாள்தனமான பெயர்கள் வைத்து அதன் பின்னணியை ஆராயாமல் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. நான் எப்படி வாழ்கிறேன். என் நண்பர்களுடன் எப்படி இருக்கிறேன். என்ன செய்கிறேன் என்பதெல்லாம் எனது சொந்த விஷயம். எனவே உங்களுடைய கருத்துகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்