சினிமா செய்திகள்

பிரியாமணியின் மறுபிரவேசம் எப்போது?

10 வருடங்களுக்கு பிறகு தற்போது பிரியாமணி தமிழில் நடிக்க இருக்கிறார். நல்ல வாய்ப்பு வந்ததும் தமிழில் நிச்சயம் மறுபிரவேசம் செய்வேன். விரைவில் அது நடக்கும் என்றார்.

டைரக்டர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகளில் பிரியாமணியும் ஒருவர். அமீரின் பருத்திவீரன்' படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது. தேசிய விருது பெற்றார். மலைக்கோட்டை', தோட்டா', நினைத்தாலே இனிக்கும்', ராவணன்' போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் கடைசியாக 2012-ம் ஆண்டு சாருலதா' என்ற படத்தில் பிரியாமணி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு பிறமொழி படங்களில் மட்டுமே அவர் ஆர்வம் காட்டினார்.

10 வருடங்களுக்கு பிறகு தற்போது அவர் தமிழில் நடிக்க இருக்கிறார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறார். அதுதொடர்பான கதைகளையும் கேட்டு வருகிறார்.

இதுகுறித்து பிரியாமணி கூறுகையில், நயன்தாரா நடித்த அறம்' படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அவரது நேர்மையான கலெக்டர் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது. இது மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்காக கதைகளைக் கேட்டு வருகிறேன். நல்ல வாய்ப்பு வந்ததும் தமிழில் நிச்சயம் மறுபிரவேசம் செய்வேன். விரைவில் அது நடக்கும் என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு