சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஆர்.பி. சவுத்ரி (72) மறைவுச் செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் ஆர்.பி. சவுத்ரி உயிரிழந்தார். இந்த துயரச் செய்தி தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்தவர் ஆர்.பி. சவுத்ரி. பல முன்னணி நடிகர்களை அறிமுகப்படுத்தி, திரையுலகில் தனக்கென அழியாத முத்திரை பதித்தவர்.
இந்நிலையில், நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்.பி. சவுத்ரியின் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. நான் பழகியதிலேயே மிக இனிமையான மனிதர்களில் ஒருவர். நடிகர் ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.