சினிமா செய்திகள்

ரஜினி படம் - ’விலக அதுதான் காரணம்’... மனம் திறந்த சுந்தர்.சி

ரஜினிகாந்த் இதற்கு காரணமில்லை என்று சுந்தர்.சி கூறினார்.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்த திரைப்படத்திலிருந்து தான் விலகியதற்கான காரணத்தை பற்றி இயக்குநர் சுந்தர்.சி மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், ’உண்மையில் சொல்லப்போனால் ரஜினி சார் படத்தில் எனக்கு அதிக அழுத்தம் இருந்தது. என்னுடைய விருப்பம் போல் தான் இத்தனை வருடங்களாக படங்கள் செய்துள்ளேன். மக்களுக்கு பிடிக்கும் என தோன்றினால் அதை செய்துவிடுவேன். ஆனால் இவ்வளவு பெரிய படத்தை செய்யும்போது அது தனிநபர் சார்ந்த முடிவாக இருக்க முடியாது. எனவே அந்த படத்தில் அதீத அழுத்தம் இருந்தது.

அந்த பிராஜெக்ட்டுக்கும் உண்மையாக இருக்க முடியவில்லை வாய்ப்பு கொடுத்தவர்களுக்கும் உண்மையாக இருக்க முடியவில்லை. அதனால்தான் விலகினேன். ரஜினிகாந்தோ, கமல்ஹாசனோ இதற்கு காரணமில்லை. ரஜினி சாரிடம் சொல்லிவிட்டுதான் படத்திலிருந்து நான் விலகப்போவதாக அறிவித்தேன்’ என்றார்.