சினிமா செய்திகள்

கண்பார்வையற்ற பெண் - நடக்க முடியாத ஆண்: நெகிழ வைக்கும் 'ரமணி கல்யாணம்' டீசர்

இப்படம் வரும் 22-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

சூர்யா வசிஷ்டா, தீப்ஷிகா சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரமணி கல்யாணம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த படத்தை விஜய் அதிரெட்டி இயக்கியுள்ளார். ‘கைட்ஸ் கிரியேட்டிவ்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கோர்ட்’ புகழ் ராம் ஜெகதீஷ் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.

கண்பார்வையற்ற ஒரு பெண் மற்றும் நடக்க முடியாத ஒரு ஆண் ஆகியோருக்கிடையே உருவாகும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது.

தற்போது வெளியாகியுள்ள ‘ரமணி கல்யாணம்’ டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இப்படம் வரும் 22-ம் தேதி திரைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT