சினிமா செய்திகள்

'ராமாயணம்' படத்தில் இரட்டை வேடத்தில் ரன்பீர் கபூர்... இரண்டாவது கதாபாத்திரம் என்ன தெரியுமா?

ராமாயணத்தின் முதல் பாகம் இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மும்பை,

நடிகர் ரன்பீர் கபூர், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படமான ராமாயணத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் ராமர் மற்றும் பரசுராமர் ஆகிய இரு கதாபாத்திரங்களில் தோன்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய அவர், “ராமர் ஒரு அவதாரம், பரசுராமர் அதற்கு முந்தைய அவதாரம். இரு கதாபாத்திரங்களிலும் நடிப்பது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு” என்று கூறினார்.

இந்தப் படத்தில் சாய் பல்லவி சீதையாக, யாஷ் ராவணனாக, சன்னி தியோல் அனுமானாக, ரவி துபே லட்சுமணனாக, அருண் கோவில் தசரதராக நடிக்கின்றனர். மேலும் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், குனால் குமார், ஆதிநாத் கோத்தாரே, ஷீபா சதா மற்றும் இந்திர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராமாயணத்தின் முதல் பாகம் இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.