சென்னை,
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை குலுக்கி வருகின்றன. கடந்த 26-ம் தேதி திருமணம் நடைபெற்றநிலையில், இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா புதிய வரலாறு படைத்துள்ளார். இதுவரை இந்தியாவில் அதிக லைக்குகள் பெற்ற இன்ஸ்டாகிராம் பதிவுக்கான சாதனையை கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி வைத்திருந்தார். 2024-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு, அணியுடன் அவர் பகிர்ந்த புகைப்படம் 22 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்றது. இதன் மூலம், ஒரே பதிவுக்கு 20 மில்லியனை கடந்த முதல் ஆசிய விளையாட்டு வீரர் என்ற பெருமை பெற்றார்.
ஆனால் தற்போது, ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணப் புகைப்படங்கள் சில மணி நேரங்களிலேயே 25மில்லியன் லைக்குகளை கடந்து, கோலியின் சாதனையை முறியடித்துள்ளது.