சினிமா செய்திகள்

"அதிர்ச்சியான நடிகை ராஷ்மிகா" ஆன்லைனில் பர்கர் ஆர்டர் செய்தவருக்கு கிடைத்த பொருள்...!

வேடிக்கையான வீடியோக்களை வெளியீட்டு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தினத்தந்தி

மும்பை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் அல்லது வேடிக்கையான வீடியோக்களை வெளியீட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பரபரப்பாகி உள்ளது.

ஆன்லைன் மூலம் ராஷ்மிகா, பர்கர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், மணி நேர கண்ணாடி டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பர்கரை ஆர்டர் செய்துவிட்டு அதற்காக ஆவலுடன் எதிர்பார்த்து பார்சலை பிரித்தவர் ஏமாற்றத்துடன், சற்று அதிர்ச்சியானார். மேலும் இதற்கு என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது