சினிமா செய்திகள்

காதலரை கரம் பிடித்த 'லவ் டுடே' பட நடிகை - குவியும் வாழ்த்து

'ஒரு கிடாயின் கருணை மனு', 'லவ் டுடே', 'மாமன்னன்' போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

சென்னை,

பிரபல டப்பிங் கலைஞரும், 'லவ் டுடே', 'மாமன்னன்' உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகையாக முத்திரை பதித்தவருமான ரவீனா ரவி, இன்று மலையாள இயக்குனர் தேவன் ஜெயக்குமாரை மணந்தார்.

தேவன் ஜெயக்குமார் இயக்கிய மலையாளப் படமான 'வாலாட்டி' படத்தில் ரவீனா ரவி டப்பிங் பேசினார். அப்போது இவர்களிடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் காதலை அதிகாரபூர்வமாக சமூக வலைதளங்கள் வாயிலாக அறிவித்தனர்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று (மே 10) இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. சமூக வலைதளங்களில் ரவீனா ரவியின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

டப்பிங் துறையில் முன்னணி நட்சத்திரங்களுக்குக் குரல் கொடுத்து வரும் ரவீனா ரவி, 'ஒரு கிடாயின் கருணை மனு', 'லவ் டுடே', 'மாமன்னன்' போன்ற படங்களில் தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

திருமணத்திற்குப் பிறகும் ரவீனா ரவி தொடர்ந்து திரையுலகில் டப்பிங் மற்றும் நடிப்புப் பணிகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.