பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் கருணாகரன் மீது பொதுநலன் கருதி என்ற படத்தை இயக்கிய சீயோன் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் அவர் நடித்துள்ள பொதுநலன் கருதி படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்றும், இதுபற்றி கேட்டதற்கு கந்துவட்டி கும்பலை அனுப்பி மிரட்டுகிறார் என்றும் புகாரில் கூறியிருந்தனர்.