சினிமா செய்திகள்

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளையொட்டி “ரிவால்வர் ரீட்டா” படக்குழு வெளியிட்ட பாடல்

சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சந்துரு இயக்கத்தில் 'ரிவால்வர் ரீட்டா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

கடந்த ஆண்டு 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரலானது.

தமிழில் கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த ''ரகு தாத்தா'' படம் சரியாக போகாததால், ரிவால்வர் ரீட்டா படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளையொட்டி ரிவால்வர் ரீட்டா படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு