சினிமா செய்திகள்

"நிம்மதியே இல்லை... பாரமா இருக்கு" - இன்ஸ்டாகிராமுக்கு ’குட் பை’ சொன்ன நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி

சிறிது காலம் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி இருக்கப் போவதாக கூறியுள்ளார்.

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். ஆன்லைனில் நேரத்தைச் செலவிடுவதை விட, நிஜ வாழ்க்கையின் தருணங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சமீபகாலமாக, நான் என்னையே கொஞ்சம் மிஸ் செய்கிறேன். சமூக வலைதளங்கள் இப்போது பாரமாக தோன்றுகின்றன. ஒரு தருணத்தை புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுக்க வேண்டும் என்று நினைக்காமல், அந்தத் தருணத்தில் நிஜமாக வாழ்வதை நான் மிஸ் செய்கிறேன். அமைதியை மிஸ் செய்கிறேன். சாதாரணமாக இருப்பதை மிஸ் செய்கிறேன்," என்று தெரிவித்துள்ளார். மேலும், சிறிது காலம் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி இருக்கப் போவதாக ரியா கூறியுள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்குப் பிறகு, ரியா சக்ரவர்த்தி ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.