சினிமா செய்திகள்

ரூ.10 கோடி பட்ஜெட்… 9 மொழிகளில் ரீமேக்: ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காதல் ஹிட்

தமிழ் உள்பட 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது.

சென்னை,

ரூ.10 கோடி செலவில் உருவான ஒரு சிறிய படம், பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றி பெற்று, ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கில் ’நுவோஸ்தனந்தே நெனோதந்தான’ என்ற பெயரில் உருவான இந்த படம், பின்னர் தமிழ் உள்பட 9 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது.

தமிழில் இப்படம் ’உனக்கும் எனக்கும்’ என்ற தலைப்பில் வெளியானது. ரவி மோகன் மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த காதல் திரைப்படம், ரசிகர்களை கவர்ந்தது. ஆக்சன் காட்சிகள் இல்லாமல், உணர்ச்சிப்பூர்வமான காதல் கதையாக வந்த இந்த படம் இன்றும் ரசிகர்களின் மனதில் வாழ்கிறது.

படம் மட்டுமில்லாமல் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. யூடியூபில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்ற இந்த பாடல்கள், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. சிறிய பட்ஜெட்டில் உருவாகி, பல மொழிகளில் வெற்றி கண்ட இந்த படம், தென்னிந்திய சினிமாவில் மறக்க முடியாத காதல் கிளாசிக்காக திகழ்கிறது.