சினிமா செய்திகள்

முதல் இந்தி படத்தில் தடுமாறிய சாய் பல்லவி… கைகொடுக்குமா ‘ராமாயணம்’?

'ஏக் தின்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறத் தவறியுள்ளது.

மும்பை,

தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சாய் பல்லவி, பாலிவுட்டில் அறிமுகமான 'ஏக் தின்' (Ek Din) திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறத் தவறியுள்ளது.

அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நடித்த இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 1-ம் தேதி வெளியான இப்படம், முதல் வார இறுதியில் இந்தியா முழுவதும் சுமார் ரூ. 3.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாககூறப்படுகிறது.

அமீர்கான் போன்ற ஒரு பெரிய நட்சத்திரம் நேரடியாக விளம்பரப் பணிகளில் ஈடுபட்ட போதிலும், இந்தி ரசிகர்களிடையே இப்படம் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கன்டென்ட் சார்ந்த படங்களுக்குப் பெயர் பெற்ற அமீர்கான் புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு, இது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் 'பிரேமம்’, பிடா', 'கர்கி', ’அமரன்’ போன்ற படங்கள் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள சாய் பல்லவிக்கு, இந்தி மார்க்கெட்டில் இது ஒரு ஏமாற்றமான தொடக்கமாகும்.

'ஏக் தின்' படத்தின் தோல்வியால், சாய் பல்லவியின் அடுத்த பிரம்மாண்ட பாலிவுட் திட்டமான 'ராமாயணம்' (Ramayana) படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சாய் பல்லவி சீதையாக நடிக்கும் இப்படம் அவருக்கு வெற்றியை பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.