சினிமா செய்திகள்

ரூ.25 கோடிக்கு விற்பனை; அனுஷ்காவின் நிசப்தம் ஓ.டி.டியில் ரிலீஸ்?

நிசப்தம் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் 150 நாட்களாக இயங்காமல் முடங்கி உள்ளது. இதனால் புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக இணைய தளமான ஓ.டி.டியில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்களை ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டனர். தெலுங்கு, இந்தி படங்களும் இணைய தளத்தில் வந்தன.

இந்த நிலையில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்து கொரோனாவால் பல மாதங்களாக முடங்கி உள்ள நிசப்தம் படத்தையும் ஓ.டி.டி தளத்தில் வெளியிட ரூ.25 கோடிக்கு விற்று இருப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் தயாராகி உள்ளது. கிரைம் திகில் படமாக உருவாகி உள்ளது. இதில் அனுஷ்கா ஓவிய கலைஞராக நடித்துள்ளார். முன்னணி நடிகையான அனுஷ்கா படத்தை ஓ.டி.டியில் வெளியிடுவதாக வந்துள்ள தகவல் தியேட்டர் அதிபர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்