சினிமா செய்திகள்

சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ - நாளை வெளியாகும் முதல் பாடல்... பிடிஎஸ் வீடியோ வெளியீடு

இப்படம் வரும் மே 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகை சமந்தா கடைசியாக கடந்த ஆண்டு வெளியான 'சுபம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவரது தயாரிப்பில் வெளியான முதல் படமாகும். இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் ‘மா இன்டி பங்காரம்’.

இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா, கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் மே 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படதின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ’தஸ்ஸாடியா’ என்ற அந்த பாடல் நாளை வெளியாகிறது. தற்போது அப்பாடலின் பிடிஎஸ் வீடியோ வெளியாகி இருக்கிறது.