சென்னை,
நட்சத்திர நடிகை சமந்தா தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் பாலிவுட் இயக்குனர் ராஜ் நிதிமோருவை 2-வது திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சமந்தா தனது தொழில் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், மேலும் புதிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மறுபுறம், சமந்தா தனது பெயரை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமந்தாவின் உண்மையான பெயர் சமந்தா ரூத் பிரபு. தற்போது ராஜ் நிதிமோருவை மணந்த சமந்தா, தனது கணவரின் குடும்பப் பெயரை தனது பெயரின் இறுதியில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சமந்தா தற்போது 'மா இன்டி பங்காரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் கார்டில் சமந்தாவின் பெயர் சமந்தா நிதிமோரு என்று காட்டப்படும் என்று தெரிகிறது.
நாக சைதன்யாவை திருமணம் செய்த போது நடிகை சமந்தா அந்த நேரத்தில் தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.