சினிமா செய்திகள்

ஓடும் ரெயில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

விரைவு ரயிலில் தமிழ் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆண்டோ போஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். #molested #actressSanusha

திருவனந்தபுரம்

ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை ஓடும் ரெயில் பாலியல் தொல்லைக்கு ஆளானார். அவரின் புகாரில் பேரில் அந்தநபர் கைது செய்ப்பட்டார்.

நடிகை சனுஷா கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

மேலும், ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் விரைவு ரயிலில் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தபோது ஆண்டோ போஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து சனுஷா டிடிஆரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து டிடிஆர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் பாலியியல் தொந்தரவு கொடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர். அந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்