சென்னை,
பாலிவுட் பாட்ஷா, கிங்கான் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமா ரசிகர்களின் நாடி துடிப்பை நன்றாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவரது மகள் சுஹானாகான். இவர் நடிகையாக முயற்சி செய்து வருகிறார். அவ்வப்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார்.
தற்போது இவர் இத்தாலியில் தன் விடுமுறையை கொண்டாடி வருகிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் அவர் போல்கா டாட் ஆடையை உடுத்தி இருக்கிறார். இந்த ஆடையின் மதிப்பு ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது.
சமீபத்தில் ரூ.200 கோடி செலவு செய்து இவரை இந்தி படத்தில் நடிகையாக அறிமுகப்படுத்த ஷாருக்கான் தயாராகி இருப்பதாக தகவல் வெளியானது.
View this post on Instagram