சினிமா செய்திகள்

3 நாட்களில் ரூ.54 கோடி வசூலை கடந்த சைத்தான் திரைப்படம்

அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் நடித்துள்ள சைத்தான் திரைப்படம் கடந்த 8ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தினத்தந்தி

மும்பை,

இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'சைத்தான்'. இந்த படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். சூப்பர் நேச்சூரல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் கடந்த 8ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.14.75 கோடி வசூலை குவித்தது. தொடர்ந்து இரண்டாவது நாளும் படத்தின் வசூல் மேலும் ஏற்றம் கண்டது. அதன்படி ரூ.18.75 கோடி வசூலை குவித்தது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.20.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் மூன்று நாட்களில் சுமார் ரூ.54 கோடி வசூலை கடந்துள்ளது. இந்தியில் மட்டுமே இந்த படம் வெளியாகியுள்ள நிலையில், பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி இருந்தால் முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக அஜய் தேவ்கன் நடித்த திரைப்படம் திரிஷ்யம்-2 வெளியான 3 நாட்களில் ரூ.64 கோடி வசூல் செய்தது. தற்போது அஜய் தேவ்கன் நடித்துள்ள சைத்தான் திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.54 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது