சினிமா செய்திகள்

‘என் அதிர்ஷ்ட நடிகை’ - தீபிகா படுகோனை புகழ்ந்த அட்லீ

அட்லீ தற்போது அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழில், விஜய்யை வைத்து வரிசையாக படங்களை இயக்கிய அட்லீ, இந்திக்கு சென்று ’ஜவான்’ படத்தை இயக்கினார். ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த இப்படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஏஏ22xஏ6(AA22XA6) எனப் பெயரிடப்பட்டுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகை தீபிகா படுகோன் பற்றி அட்லீ புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில்,

தீபிகா படுகோன் என் அதிர்ஷ்ட நடிகை. இது தீபிகாவுடன் நான் இணையும் இரண்டாவது படம், அவருடன் பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவம். இந்தத் திரைப்படத்தில் தீபிகா படுகோனின் புதிய பக்கத்தை ரசிகர்கள் காண்பார்கள்’ என்றார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்