சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் இணைந்த சுருதிஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் தொடங்கியது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நடிகை சுருதிஹாசனும் கலந்துகொண்டுள்ளார்.

ஐதராபாத்,

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள், நடிகை, பாடகி என பன்முகத் திறமை கொண்டவர் சுருதிஹாசன் . இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'லக்' என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் ஏழாம் அறிவு, சிங்கம், 3, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் சுருதிஹாசன் கடைசியாக சலார் படத்தின் 2வது பாகத்தில் நடித்தார்.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுருதிஹாசன் இசையமைத்து இயக்கிய பாடலுக்கு கமல் ஹாசன் பாடல் வரிகள் எழுதியிருந்தார். அப்படி உருவான 'இனிமேல்' என்ற ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் சுருதிஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார்.

4 ஆண்டுகளாக சாந்தனு ஹன்சாரிகா என்பரை காதலித்து வந்த சுருதிஹாசன், கருத்துவேறுபாடு காரணமாக சமீபத்தில் பிரேக் அப் செய்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'கூலி'படத்தில் சுருதிஹாசன் நடிக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சுருதிஹாசன், முதல் நாள் ஷூட்டிங் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "Day 1 coolie' என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார். படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு