சினிமா செய்திகள்

புனித் ராஜ்குமார் மறைவால் நடிகர் சூர்யா பட பாடல் வெளியீடு தள்ளிவைப்பு

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவின் காரணமாக ஜெய்பீம் மற்றும் டாக்டர் படத்தின் பாடல் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்த புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக திடீரென்று உயிர் இழந்தார். 

இந்நிலையில், நடிகர் சூர்யா நடிப்பில், உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படத்தின பாடல் ஆல்பம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல் ஆல்பம் புனித் ராஜ்குமார் மறைவினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நடிகர்  சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் சோ பேபி பாடல் வீடியோ நேற்று வெளியாவதாக இருந்தது. சிவகார்த்திகேயன் எழுதிய இப்பாடலின் ஆடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், புனித் ராஜ்குமார் மறைவின் காரணமாக 'சோ பேபி' பாடல் வீடியோ வெளியீடும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்